ஐ.நா 30/1 தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தானது! ஜனாதிபதி அறிவிப்பு -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 30/1 தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசாங்கத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட, 19வது அரசியலமைப்பு திருத்தம் பாரிய பிழையாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொழும்பிலுள்ள சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,
“மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும். மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும்.
இந்த குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.
மக்களிடம் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட்டு வருவதாக” ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐ.நா 30/1 தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தானது! ஜனாதிபதி அறிவிப்பு -
Reviewed by Author
on
December 20, 2019
Rating:

No comments:
Post a Comment