அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரில் டெங்கு அபாயம் தீவிரமடைந்து வருக்கின்றது. பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா...படம்

மன்னாரில் டெங்கு தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள்
மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இவ் டெங்கு பரவுவதை தடுப்பதற்று பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது டெங்கு நோய் அதிகரிப்பு சம்பந்தமாக
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா  தெரிவிக்கையில்

மன்னார்pல் தற்பொழுது முன்னையவிட டெங்கு தீவிரமாக மக்களை பீடித்து
வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு சுகாதரப் பகுதியைவிட பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கின்றது.

இவ் நோயானது மிகவும் பாரதூரமான நோயாக காணப்படுவதால் பொதுமக்கள் ஏனோதானோ என்று இருக்காமல் மிகவும் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும் என நான் பொதுமக்களை வேண்டி நிற்கின்றேன்.

இவ் நோய் ஒரு உயிர்கொல்லியாக இருப்பதால் மற்றவர்களை கவனிப்பதைவிடுத்து தங்களுக்கு இவ் நோய் உருவாகக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் முதலில் சிந்திக்க வேண்டும். ஆகவே இதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் நுளம்பு உற்பத்தியாகும்
அதன் வாழ்விடங்களை உருவாக்கிக் கொடுக்க நாம் இடம் அளிக்கக்கூடாது.

தனியார் வீடுகள் மட்டுமல்ல பொதுவாக பொது இடங்களில் கவனிப்பாரற்று
இருக்கும் இடங்களை மிகவும் துப்பரவாக வைத்திருப்பது அவ் சூழலில் வாழும் மக்களின் முக்கிய கடமையாகும். நுளம்பு எம்மை தீண்டாதிருக்க உடலில் பூசக்கூடிய சில பதார்த்தங்கள் கடைகளில் இருப்பதால் அவற்றை பாவித்துக் கொள்வது சிறந்தது.

இவ்விரண்டையும் சற்று கவனித்து வந்தால் இவ் நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றன. எவருக்கும் காய்ச்சல் நோய் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் வைத்தியர்கள் கூறும் அறிவுரைகளை ஒவ்வொருவரும் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

மன்னாரைப் பொறுத்தமட்டில் ஐந்து சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகள்
காணப்படுகின்றன. இவ் ஐந்திலும் நான்கில் சிறியளவு டெங்கு நோய் அபாயம்
இருந்தாலும் மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவிலேயே அதிகமான நபர்கள் டெங்கினால் பாதிப்படைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் மன்னார் நகர் மக்கள் செறிந்து வாழும் இடமாக இருப்பதால் இவ்
பிரிவிலுள்ள மக்கள் மிகவும் விழப்பாக இருந்து செயல்பட வேண்டும்.
இதுவிடயத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். பொதுமக்களும் தீவரமாக செயல்பட வேண்டும்.

இவர்கள் தங்கள் இடத்தை மட்டுமல்ல சுற்று சூழலையும் தங்களின் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமானது.கடந்த மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு ஓரிருவருக்கு மட்டுமே
இருக்க காணப்பட்டது. ஆனால் கடந்த ஒக்டோபர் மாதம் சுமார் முப்பது
பேருக்கும் இவ் நவம்பர் மாதமும் முப்பது நபர்கள் மட்டில் இவ் நோய்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மன்னார் நகர் புறத்திலே அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே
இவ்விரு மாதங்களிலும் இவ் நோயால் பலர் பீடிக்கப்பட்டு வருவதால் சுகாதாபிரிவினரால் மட்டுமல்ல ஒவ்வாருவரும் இவ் நோயை மன்னாரிலில் தடுப்பதற்குபூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் என்பதை வலியுறுத்தி நிற்கின்றேன் என்னறார்.

இது விடயமாக சுகாதார பிரிவினருக்கு மட்டுமல்ல சகல மக்களுக்கும்
விழப்புணர்வை மேம்படுத்தி வருவதாகவும் நாளாந்தம் எமது அதிகாரிகள்
ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.

மன்னார் நகரில் டெங்கு அபாயம் தீவிரமடைந்து வருக்கின்றது. பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா...படம் Reviewed by Author on December 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.