மன்னார் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இறால் பண்ணையால் மோதல்-படங்கள்
மன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
-மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாசின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிஸாட் பதியுதீன்,சிவசக்தி ஆனந்தன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-மேலும் மன்னார் நகர சபை மற்றும் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,திணைக்களங்களின் அதிகாரிகள்,படைத்தரப்பு அதிகாரிகள் என அழைக்கப்பட்ட திணைக்கயங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-இதன் போது கடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.மேலும் வீதி, போக்குவரத்து, குடி நீர், சுகாதாரம், மருத்துவம்,கல்வி,மீன் பிடி,விவசாயம் போன்றவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது குறித்த கூட்டத்தில் மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட இறால் பண்ணை தொடர்பாக பொது மக்களால் கொண்டு வரப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன் போது அவ் இறால் பண்ணைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம் பெற்றது.
இந்த நிலையில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருக்கும்,மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபையின் தலைவர் ஆகியோருக்கு இடையில் கடும் வாய்தக்கம் ஏற்பட்டது.
-இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீனும் குறுக்கிட்டு கருத்துக்களை முன் வைத்தார்.
குறித்த இறால் பண்ணையினால் சூழல் மாசடைவதாகவும் மீன்பிடி பாதிக்கப்படுவதாகவும் எருக்கலம் பிட்டி மீனவ அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்கள் தெரிவித்திருந்தன.
இதன் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட நிலையில் குறித்த தர்க்கம் கூட்டத்தில் இடம் பெற்றது.
மேற்படி குறித்த இறால் பண்ணை அமைப்பதற்கான அனுமதி வழங்கிய அரச நிறுவனங்கள் மற்றும் எருக்கலம் பிட்டி பொது அமைப்புக்கள் உட்பட பிரதேச சபை ,பிரதேச செயலகம் ஆகிய அணைத்தையும் இனைத்து இறால் பண்ணை தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளவதற்கான முடிவு இறுதியில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் தோட்டவெளி பகுதியில் மீன் வளர்ப்பு என்றை பெயரில் மண் அகழ்வு இடம் பெற்று வருவதாவும்,குறித்த மண் அகழ்வை உடனடியாக நிறுத்த கோரி சபையில் கோரிக்கை முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
December 10, 2019
Rating:

No comments:
Post a Comment