அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எழுத்தூர் பகுதியில் தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை-மன்னார் பொலிஸார் தீவிர விசாரனை.

மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார்  25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,

மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  2.50 மணியளவில் சுமார் 8 பேர்கள் கொண்ட திருடர் குழு ஒன்று  வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.

-இதன் போது  வீட்டில் நித்திரையில் இருந்து சத்தம் கேட்டு எழுந்த கணவன், மனைவி இருவரையும் கடுமையாக  தாக்கி அவர்கள் இருவரின் தொலை பேசிகளையும்  பறித்த திருடர்கள் குறித்த தொலைபேசிகளை உடைத்தனர்.

பின் இருவரையும்  ஒன்றாக கட்டி வைத்து விட்டு  பணம் நகைகளை கேட்டுள்ளனர்.

 அவர்கள் இல்லை என்று சொல்லவும் அருகில் நின்ற அவர்களுடைய   பெண் பிள்ளையை பிடித்து  அச்சுரூத்தியதோடு, 'உன் பிள்ளை வேண்டும் என்றால் பணம் நகை இருக்கும் இடத்தை சொல்' என திருடர்கள் அச்சுரூத்தியுள்ளனர்.
-இந்த நிலையில  கணவன் மனைவி இருவரும் தங்களுடைய நகை பணம் உள்ள  இடங்களை கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் சத்தம் வெளியில் வராமல் இருக்க அனைவரின் வாய்களும் கட்டப்பட்டது.
-பின் வீட்டில் இருந்த சுமார்  25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை எடுத்துள்ளனர்.

பின் வந்த திருடர்களில் ஒருவன் அங்கிருந்து 'வேலை முடிந்து விட்டது   விடியப் போகின்றது சீக்கிரமா வாங்க'  என்று தொலைபேசியில் கூறிதும்  வாகனம் ஒன்று வந்தது.

குறித்த வாகனத்தில் குறித்த திருடர்கள் நகை மற்றும் பணத்துடன்  தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் திருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான கணவன், மனைவி இருவரும் பலத்த காயங்களுடன் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று  முறைப்பாடு செய்தனர்.

பின்னர் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த திருடர்கள் அனைனவரும் கூறிய கத்திகளை வைத்திருந்ததோடு, சமயல் அறையில் உள்ள  தமது கத்திகளையும் எடுத்து சென்றுள்ளதாகவும் பாதீக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான குறித்த குடும்பத்தின் தலைவியாக உள்ளவர் மன்னார் மாவட்டச் செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களையும் குறிப்பாக மன்னார் மாவட்ட மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த திருட்டுச் சமபவம் தொடர்பாக  அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  விரைவான விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற் கொண்டு வருவதாக   மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் எழுத்தூர் பகுதியில் தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை-மன்னார் பொலிஸார் தீவிர விசாரனை. Reviewed by Author on January 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.