இடர்கள் நீங்கி நிலையான சுபிட்சமும் சௌபாக்கியமும் ஏற்படும் ஆண்டாக இப்புத்தாண்டு சிறப்புற அமைய வேண்டும்-ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மி.
நம்மை அனுகியுள்ள இடர்களும் அடக்கு முறையும் நீங்கி அனைத்து இன மக்களும் நிலையான சுபிட்சமும் அமைதியும் சௌபாக்கியம் பெறும் ஆண்டாக, மலரும் புத்தாண்டு திகழ வேண்டும் என மன்னார் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு அமைப்பாளர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,
நம்மை கடந்து செல்லும் பழைய ஆண்டு பல மங்களகரமான நிகழ்வுகளையும் அமங்களகரமான நிகழ்வுகளின் அடையாளங்களையும் நம் மத்தியில் விட்டுச் செல்கின்றது.
கடந்த கால யுத்த அவலங்களை விட்டு நீங்கி மகிழ்ச்சி ததும்பும் அமைதியான வாழ்வை கழித்து வந்த நாம் இடையில் கடந்த வருடம் எதிர்நோக்கிய துன்பம் நிறைந்த மனித அவலம் என்றுமே மறக்க முடியாது.
அந்த அநர்த்ததைத் தொடர்ந்து அனைத்து இன இலங்கையர்களும் எதிர்நோக்கியுள்ள சொல்லொன்ன துன்பங்களும் துயரங்களும் கடந்த வருட இறுதி நாட்கள் வரை நம்மை துரத்தி வந்ததையும் வேண்டத்தகாத சில நிகழ்வுகளை கடந்த வருடம் நாம் எதிர்கொண்டதையும் நம் இலகுவில் மறந்து விட முடியாது.
எனினும் இக்கஸ்டங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து துயரங்களும் துன்பங்களும் நம்மைவிட்டு அகன்று நம் தேசத்தின் அனைவரினதும் வாழ்விலும் உயர்வு ஏற்படவேண்டும்.
மேலும் நம்மைச் சூழ்ந்துள்ள இடர்கள் நீங்கி நிலையான சுபிட்சமும் சௌபாக்கியமும் இனங்களுக்கிடையில் சௌஜன்யமும் ஏற்படும் ஆண்டாக இப்புத்தாண்டு சிறப்புற அமைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு அமைப்பாளர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,
நம்மை கடந்து செல்லும் பழைய ஆண்டு பல மங்களகரமான நிகழ்வுகளையும் அமங்களகரமான நிகழ்வுகளின் அடையாளங்களையும் நம் மத்தியில் விட்டுச் செல்கின்றது.
கடந்த கால யுத்த அவலங்களை விட்டு நீங்கி மகிழ்ச்சி ததும்பும் அமைதியான வாழ்வை கழித்து வந்த நாம் இடையில் கடந்த வருடம் எதிர்நோக்கிய துன்பம் நிறைந்த மனித அவலம் என்றுமே மறக்க முடியாது.
அந்த அநர்த்ததைத் தொடர்ந்து அனைத்து இன இலங்கையர்களும் எதிர்நோக்கியுள்ள சொல்லொன்ன துன்பங்களும் துயரங்களும் கடந்த வருட இறுதி நாட்கள் வரை நம்மை துரத்தி வந்ததையும் வேண்டத்தகாத சில நிகழ்வுகளை கடந்த வருடம் நாம் எதிர்கொண்டதையும் நம் இலகுவில் மறந்து விட முடியாது.
எனினும் இக்கஸ்டங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து துயரங்களும் துன்பங்களும் நம்மைவிட்டு அகன்று நம் தேசத்தின் அனைவரினதும் வாழ்விலும் உயர்வு ஏற்படவேண்டும்.
மேலும் நம்மைச் சூழ்ந்துள்ள இடர்கள் நீங்கி நிலையான சுபிட்சமும் சௌபாக்கியமும் இனங்களுக்கிடையில் சௌஜன்யமும் ஏற்படும் ஆண்டாக இப்புத்தாண்டு சிறப்புற அமைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இடர்கள் நீங்கி நிலையான சுபிட்சமும் சௌபாக்கியமும் ஏற்படும் ஆண்டாக இப்புத்தாண்டு சிறப்புற அமைய வேண்டும்-ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சமியூ முகம்மது பஸ்மி.
Reviewed by Author
on
January 01, 2020
Rating:

No comments:
Post a Comment