வடமாகாண பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் -
வடமாகாண பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
வடமாகாணத்திலுள்ள அரச நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 11.01.2020 காலை 10 மணிக்கு வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் ஊடாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பட்டதாரிகளின் அரச நியமனத்தை குறுகிய காலப்பகுதிக்குள் உறுதிப்படுத்திக்கொள்வதாகும்.
இப்பாரிய பொறிமுறை சார்ந்த செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லவும், அதனை வெற்றி பெறச் செய்யவும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய கலந்துரையாடலுக்கு அரச நியமனங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்துப் பட்டதாரிகளும் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணப் பிரதிகளுடன் தவறாது கலந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதுடன் குறித்த முக்கிய கலந்துரையாடலுக்கு கலந்து கொள்ளும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் மாத்திரம் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.
இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தின் பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் -
Reviewed by Author
on
January 09, 2020
Rating:

No comments:
Post a Comment