கிளிநொச்சி நகரில் உருவாகிவரும் பௌத்த விகாரைகள்! பல்கலை நிர்வாகம் மீது திரும்பும் மாணவர்களின் கோபம்!! -
அதேவேளை கிளிநொச்சி யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒரு மரத்தின் கீழ் சிறிய குடிசை ஒன்றிலேயே தொடர்ந்து இயங்கி வருகிறதும், பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது. விகாரை அமைப்பதற்கு நிலமும் அனுமதியும் வழங்கி நிதி மூலங்களையும் பெற்றுக்கொடுத்த யாழ். பல்கலைக்கழக பேரவை, பிள்ளையார் ஆலயம் அமைப்பதற்கு உரிய அனுமதியை வழங்காது அசமந்த போக்கில் செயற்படுவதாக மாணவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
குளற்றங்கரை மரத்தின் கீழ் ஓலைக் கொட்டிலாலான பிள்ளையார் ஆலயம் (அதாவது இரண்டு கருங்கற்களை விக்கிரகங்களாக பாவித்து) பொன்நகர் கிராம மக்களால் வழிபடப்பட்டுவந்தது.
இச்சிறிய கோயில் நிலத்தை அறிவியல்நகர் உருவாக்கப்பட்போது மக்களிடமிருந்து கையகப்படுத்தி மக்களை வேறு இடத்தில் குடியேற்றியபோதும் அந்த ஆலயத்திற்கு எந்தவித பாதிப்பும் இடம்பெறவில்லை.
தற்பொழுது பல்கலைக்கழகம் கையகப்படுத்தியபின்னர் மாணவர்கள் வழிபட முற்பட்டபோதும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. தமது கண்முன்னே ஆலயம் சிதைவடைவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஊழியர்கள் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் ஆலயத்தை புனரமைக்க அனுமதிகோரிய போதும் அவர் பாராமுகமாக உள்ளதாக குற்றம்சுமத்தப்படுகின்றது.
ஆயினும் கடந்த 02.09.2019 அன்று ஆவணிச் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டபோது பிள்ளையார் படம்ஒன்றை வைத்து வழிபாடு செய்யப்படட்டது. பின்னர் புரட்டாதி மாத சதுர்த்தி 02.10.2019 அன்று இவ்வாறு வழிபடச்சென்ற மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
மதம்சம்பந்தமான விரதங்கள் விழாக்கள் இடம்பெறும் தினங்களில் கடமைநிமித்தம் தமது சொந்த இடங்களிலுள்ள மதவழிபாட்டுத்தலங்களுக்கு செல்முடியாத (விடுப்பு எடுக்க முடியாத) பௌத்த ஊழியர்கள் மற்றும் பரீட்சைக்குச் செல்லும் முன் மாணவர்கள் வழிபடுவதற்கு அந்தந்த இடங்களிற்கு அண்மையில் சிறிய அளவிலான மதவழிபாட்டுத் தலம் இருந்தால் போதுமானது.
இந்தவகையில் இராணுவம் அமைத்த பௌத்த வழிபாட்டு ஸ்தலம் விவசாயபீட வளாகத்தில் இருப்பதால், பௌத்த மாணவர்களைப் பொறுத்தவரை பெரிய பிச்சனைகள் இல்லை.
ஆனால் சைவமாணவர்களது நிலையை மிகவும் மோசமானதாக உள்ளது.
சைவ மாணவர்கள் வழிபடுவதற்கு சுமார் 2 km இற்கு அப்பால் மதவழிபட்டுதலங்கள் அமைப்பதற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள்.
அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளையும், பதவி உயர்வுகளையும் பெறும் நோக்கதிலேயே விகாரை அமைப்பதற்கு யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் அனுமதி வழங்கியதாக குற்றம்சுமத்தும் மாணவர்கள், பிள்ளையார் ஆலயம் அமைப்பதற்கு எந்தவித ஆதரவையும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள்.
முழுக்க முழுக்க தமிழ் மக்கள் வாழும் கிளிநொச்சி நகரில் உள்ள யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் மிகப்பெரிய விஸ்தீரணத்தை கொண்ட நிலத்தை ஒதுக்கி பெரிய விகாரை ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றார்கள்.
வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் புதிதாக விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகிறதுன
கன்னியா சிவன் கோவில், செம்மலை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களை ஆக்கிரமித்து பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருவதால் பெரும் சர்ச்சைகளும் தமிழ் சிங்கள மக்களிடையே மோதல்களும் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே தமிழர் தாயகங்கள் யாவுமே சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி நிலப்பரப்பில் இவ்வளவு பெரிய விகாரை அமைக்கப்படுவது நாளைடைவில் ஆழமாகவும் அகலமாகவும் கூர்ப்படைந்து வருகின்ற பௌத்த மயமாக்கலுக்கு மேலும் வழியை ஏற்படுத்தும் என்று பல்கலைக்கழக சமூகத்தின் ஒரு தரப்பினர் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.
உரியவர்கள் இந்த விடயத்தில் அக்கறை எடுத்து உரியதைச் செய்வது, மாணவர்கள் இடையேயான இன முரன்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கு என்பதில் சந்தேகம் இல்லை.
கிளிநொச்சி நகரில் உருவாகிவரும் பௌத்த விகாரைகள்! பல்கலை நிர்வாகம் மீது திரும்பும் மாணவர்களின் கோபம்!! -
Reviewed by Author
on
January 11, 2020
Rating:

No comments:
Post a Comment