அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணம் ஆரம்பித்து வைப்பு-படம்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி  'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இன்று வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நித்தம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர் கடந்த 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம்' நேற்றைய தினம் புதன் கிழமை மாலை மன்னாரை வந்தடைந்தது.
-இந்த நிலையிலே மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

-ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மன்னார் பிரதேசச் செயலாளர்,வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி உற்பட பலர் கலந்து கொண்டு குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தை  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

மன்னாரில் இருந்து ஆரம்பமான குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்குச் சென்று அங்கிருந்து
முல்லைத்தீவு,திருகோணமலை சென்று அங்கிருந்து மீண்டும் கொழும்பை நேக்கி பயணிக்கவுள்ளார்.

-இலங்கையின் சுதந்திரதினமான பெப்பிரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்குச் சென்று தனது 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.குறித்த நபர் தொடர்ச்சியாக 10 ஆவது வருடதாக குறித்த 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணம் ஆரம்பித்து வைப்பு-படம் Reviewed by Author on January 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.