அரச வேலைவாய்ப்புக்கு பணம் அறவிடும் மோசடிக்காரர்கள்! விழிப்பாயிருங்கள் -
மோசடிக்காரர்கள் சிலர் தமது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பிழையாக வழிநடத்தி வேலைப்பெற்று தருவதாகக் கூறி பணம் பறிக்கும் ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்றையதினம் விடுத்துள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்க பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் இவ் வேலைத்திட்டத்தினை சில மோசடிக்காரர்கள் தமது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பிழையாக வழிநடத்தி வேலைப்பெற்று தருவதாகக் கூறி பணம் பறிக்கும் ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர்.
இவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள், ஜனாதிபதியின் இணைப்பாளர்கள், கட்சி அமைப்பாளர்கள் எனும் தோரணையில் இவ் வேலைகளை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை எமது அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதோடு இவ்வாறானவர்களை எமக்கு அறியத் தருமாறும் கேட்டுக் கொள்கின்றது.
கடந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை இந்த அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் இவ்வேளையில், படித்த தகுதியுள்ளவர்கள் பயனடையவுள்ள இவ்வேளையில் தயவு செய்து இவ்வாறான மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச வேலைவாய்ப்புக்கு பணம் அறவிடும் மோசடிக்காரர்கள்! விழிப்பாயிருங்கள் -
Reviewed by Author
on
January 03, 2020
Rating:

No comments:
Post a Comment