மன்னார்-யாழ் பிரதான வீதியில் டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்-(படம்)
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படு காயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் வெள்ளாங்குளம் பகுதியில் இருந்து இலுப்பைக்கடவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பாலியாற்றைச் சேர்ந்த உழவு இயந்திர ஒட்டுனர் காயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
-குறித்த உழவு இயந்திரம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடததக்கது.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் வெள்ளாங்குளம் பகுதியில் இருந்து இலுப்பைக்கடவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பாலியாற்றைச் சேர்ந்த உழவு இயந்திர ஒட்டுனர் காயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
-குறித்த உழவு இயந்திரம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடததக்கது.

மன்னார்-யாழ் பிரதான வீதியில் டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்-(படம்)
Reviewed by Author
on
January 12, 2020
Rating:

No comments:
Post a Comment