வடக்கு மாகாணம் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை -
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை பொலிஸ் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் இருந்து 2 ஆயிரம் பேரை பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
200 பேர் பிரதி பொலிஸ் பரிசோதகர்கள், ஆயிரத்து 500 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பொலிஸ் அதிகாரிகளுக்கு வடக்கில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அங்குள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையில் அமர்த்தப்பட உள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணம் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை -
Reviewed by Author
on
January 09, 2020
Rating:

No comments:
Post a Comment