காற்றிலிருந்து உணவு தயாரிக்கும் முயற்சி வெற்றியளிப்பு -
இம் முயற்சி வெற்றியளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோயா இனத் தாவரங்களில் அதிகமான புரதச் சத்து காணப்படும்.
இவற்றிற்கு போட்டியாக விளங்கக்கூடிய அளவிற்கு காற்றிலிருந்து தயாரிக்கப்படும் புதிய உணவில் புரதச் சத்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவுத் தயாரிப்பிற்கு மண்ணில் காணப்படக்கூடிய பக்டீரியா இனம் ஒன்று பயன்படுத்தப்படுகின்றது.
குறித்த பக்டீரியாவினைப் பயன்படுத்தி நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுப்பதன் மூலம் இவ் உணவு பெறப்படுகின்றது.
இச் செயன்முறைக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான மின்சாரம் சூரியப்படலம் மற்றும் காற்று மின் உற்பத்தி என்பவற்றிலிருந்து பெறப்படுவதனால் சூழலுக்கு பாதிப்பு இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காற்றிலிருந்து உணவு தயாரிக்கும் முயற்சி வெற்றியளிப்பு -
Reviewed by Author
on
January 10, 2020
Rating:

No comments:
Post a Comment