கொரோனா பீதியில் கட்டுபாடுகளை விதிக்கும் ஆசிய நாடுகள்! நோய் எங்களை தாக்காது என கூறும் தமிழ்ப்பெண் -
சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 1500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது.
முக்கியமாக இந்தியா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா, ஹொங்ஹொங், பிலிப்பைன்ஸ், போன்ற ஆசிய நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது.
இதில் ஜப்பான், ஹொங்ஹொங், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தனித்தனியாக ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நாடுகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிலிப்பைன்ஸில் உள்ள பிரபல தேவாலயத்தில் கடந்த ஞாயிறு அன்று வரும் மக்கள் மற்றவர்களுடன் கை குலுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அடுத்தவரின் கைகளை பிடித்து கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டது.
ஹொங்ஹொங்கில் இரண்டு வாரங்களுக்கு தேவாலயங்களில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, அதை வீட்டிலிருந்து ஓன்லைன் மூலம் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஜப்பானில் உள்ள புத்தமத கோவில்களை காண வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் குவிவது வழக்கம்.
ஆனால் கொரோனா பீதியால் அவர்களின் வருகை அதிகளவு குறைந்துள்ளது.
அதே போல பேங்காக்கில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த Wat Pho கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருவார்கள், அதில் அதிகம் பேர் சீனர்களாக இருப்பார்கள்.
ஆனால் கொரோனாவுக்கு பின்னர் அங்கு உள்ளூர் வாசிகள் கூட வருகை தர பயப்படுவதால் கூட்டமே இருப்பதில்லை என அங்குள்ள துறவியான Phra Maha Udom Panyapho கூறுகிறார்.
இதே போன்ற நிலையே வடகொரியாவிலும் உள்ளது,
மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் தைபூசம் வெகுவிமர்சியாக கடந்த வார இறுதியில் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். அங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள போதிலும் மக்கள் கோவிலில் ஒன்று கூடியுள்ளனர்.
கடவுள் இங்கே இருப்பதால் கொரோனா எங்களை தாக்காது என 60 வயதான தமிழப்பெண் சாரதா கூறுகிறார்.
கொரோனா பீதியில் கட்டுபாடுகளை விதிக்கும் ஆசிய நாடுகள்! நோய் எங்களை தாக்காது என கூறும் தமிழ்ப்பெண் -
Reviewed by Author
on
February 16, 2020
Rating:

No comments:
Post a Comment