கொரோனாவால் ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் பலி! -
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியாக ரியல் மாட்டிரிட் உள்ளது. இந்த அணியின் முன்னாள் உரிமையாளராக இருந்தவர் லொரென்ஜோ சான்ஸ்.
76 வயதான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவதுமனையில் சேர்க்கப்பட்டார்.


இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.
லொரென்ஜோ சான்ஸ் 1995 முதல் 2000 வரை ரியல் மாட்ரிட் அணியின் உரிமையாளராக இருந்தார். அப்போது ரியல் மாட்ரிட் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியிருந்தது. ஒரு முறை லா லிகாவை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் பலி! -
Reviewed by Author
on
March 23, 2020
Rating:
No comments:
Post a Comment