அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் எச்சரிக்கை-மன்னார் மறைமாவட்ட மக்கள் அனுசரிக்கும் பாதயாத்திகைகளை தவிர்க்கும்படி மன்னார் ஆயர் தெரிவிப்பு.....

கொரோனா வைரஸ் எச்சரிக்கை நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதால்
மன்னார் மறைமாவட்டத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வாரி பாதயாத்திரிகைகள் திருப்பயணங்களை தவிர்க்கும்படி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மாணுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.

அதேவேளையில் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள கத்தர் திருத்தல
யாத்திரிகர் திருத்தலங்களில் வழமையாக நடைபெறும் இறைவழிபாடுகள் அவ் பங்குதள இறைமக்கள் பங்களிப்புடன் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

உலக கத்தோலிக்க இறைமக்கள் கிறிஸ்துவின் இறப்பைப்பற்றி சிந்திக்கும
இந்நாட்களில் மன்னார் மறைமாவட்ட இறைமக்களும் இக் காலங்களில் கல்வாரி நோக்கிய பாதயாத்திரிகை கல்வாரி திருத்தளங்களுக்கு சென்று பரிசுத்த வாரங்களை அனுசரிப்பது வருடந்தோறும் உள்ள வழமையாகும்.

ஆனால் தற்பொழுது நாட்டில் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ்
பீடிப்பினால் மரணங்களுக்கான அச்சுறுத்தல் ஏற்படத் தொடங்கியுள்ளமையால் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டத்திலும் இருந்துவரும் கல்வாரி திருத்தலங்களுக்கு பங்கு ரீதியாகவோ அல்லது குழுக்களாகவோ செல்ல வேண்டாம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சகல பங்கு தளங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் வருடந்தோறும் இவ் தவக்கால காலக்கட்டங்களில் தென்பகுதியிலுள்ள ஹினிதும்மை மற்றும்  வவுனியாவிலுள்ள கல்வாரி திருத்தலம், மன்னாரிலுள்ள ஓலைத்தொடுவாய், பரப்புக்கடந்தான் ஆகிய கத்தர் திருத்தலங்களுக்கு பங்கு குழுக்களாகவும் பாதயாத்திரிகளர்களாகவும் வருடந்தோறும் செல்வது வழமையானதாகும்.

தற்பொழுது நாட்டில் கொரானா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்;பட்டுள்ளதால்
மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் வழமையாக மேற்கொள்ளும் இந்த இறைபக்தி முயற்சியை கைவிடுமாறு மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சகல பங்குகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதாவது வவுனியாவிலுள்ள கல்வாரிக்கு இம்முறை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சகல பங்குகளிலிருந்தும் இறைமக்கள் பாதயாத்திரிகையாக வந்து எதிர்வரும் 18.03.2020 மன்னார் பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒன்றுகூடியவர்களாக தொடர்ந்து பாதயாத்திரிகையாச் சென்று வவுனியா கோமரசங்குளம் கல்வாரியில் ஒன்றுகூடி ஆயர் தலைமையில் நடைபெறும் இறைவழிபாட்டில் கலந்து கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அடுத்து ஓலைத்தொடுவாய் கத்தர் கோவிலுக்கு எதிர்வரும் 27.03.2020 அன்று
இவ்வாறு இறைமக்கள் பாதயாத்திரிகையாகவும் மற்றும் குடும்பங்களாகவும் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவ்வாறு மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பரப்புக்கடந்தான் கத்தர் கோவிலுக்கும் 03.04.2020 அன்று வெள்ளிக்கிழமை இறைமக்கள் இவ்வாறு பாதயாத்திரிகர்களாக செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படடிருந்த
நிலையில் கொரானா நோய் எச்சரிக்கையைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இவைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்துள்ளார்.

அதேநேரத்தில் அவ் புனித யாத்திர ஸ்தலங்களில் அவ்பகுதி பங்கு மக்களுடன் இணைந்து வழமையாக நடைபெறும் வழிபாடுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எச்சரிக்கை-மன்னார் மறைமாவட்ட மக்கள் அனுசரிக்கும் பாதயாத்திகைகளை தவிர்க்கும்படி மன்னார் ஆயர் தெரிவிப்பு..... Reviewed by Author on March 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.