குறைநிரப்பு பிரேரணை கொண்டு வந்தால் ஆதரவு வழங்குவோம்! ஜனாதிபதியிடம் சஜித் தெரிவிப்பு -
குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்தால் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணி கட்சியின் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும், அரசியல் தலையீடுகள் இன்றி இதனை மேற்கொள்ள வேண்டும் என சஜித் தரப்பு கோரிக்கை விடுத்தது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பணம் செலவிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது.
இதற்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறும், குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்க தயார் எனவும் சஜித் தரப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 73 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறைநிரப்பு பிரேரணை கொண்டு வந்தால் ஆதரவு வழங்குவோம்! ஜனாதிபதியிடம் சஜித் தெரிவிப்பு -
Reviewed by Author
on
April 07, 2020
Rating:

No comments:
Post a Comment