மன்னார் நகர சபையின் நடவடிக்கைக்கு மன்னார் வாடகை வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு--மன்னார் நகர முதல்வர் விளக்கம்.
மன்னார் நகரசபை எல்லைக்கு உற்பட வாடகை வாகன உரிமையாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னார் தற்காலிக அரச தரிப்பிடத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மன்னார் நகர சபை பிரதான கடை தொகுதி பகுதிகள் அனைத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுகீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டிட நிர்மாணப்பணிக்கு என அப்புறப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் நகர சபையினால் கடந்த ஒரு வார காலமாக உடைக்கப்பட்டு வருகின்றது.
-உடைக்கப்பட்ட அனைத்து கடைகளுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதியில் கடைகள் வழங்கப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் புதிய கடைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் 50ற்கும் மேற்பட்ட வாடகை உரிமையாளர்களை கொண்ட தங்கள் கட்டிடமானது எந்த ஒரு அறிவித்தலும் இன்றி 'கொரோனா' ஊரடங்கு காலப்பகுதியில் ஒரு மணி நேர அவகாசத்தில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய ஆவணங்கள் , அலுவலக பொருட்கள் என்பன வீசப்பட்டுள்ளதாகவும் எனவே தங்களுக்கு என ஒரு அலுவலக கட்டிடமும் , நகர பகுதிக்குள் தங்களது வாகனங்களை தரித்து நிற்க வைப்பதற்கு என ஒரு இடத்தை மன்னார் நகர சபை அடையாளப்படுத்தி எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடைப்படையில் மன்னார் நகர பகுதியை சேர்ந்த வாடகை வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் வாகனக்களை தற்காலிக பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் வினவிய போது,,,
மன்னார் நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் ஊடாக மன்னார் நகரில் பாரிய கடைத்தொகுதி,சுப்ப மாக்கட்,வாகன தரிப்பிடம், நீர்த்தடாகம் உற்பட வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஆதன் அடிப்படையில் மன்னார் நகரப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அனைத்து தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டுள்ளது.
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கான மாற்று கடைகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை வர்த்தகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய கடைகளுக்கு சென்று தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலரால் சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு அலுவலகமாக பயண் படுத்தப்பட்டு வந்த இடத்தை அவர்கள் கடையாக வாடகைக்கு விட்டு வருமானத்தை பெற்று வந்தனர்.
அவர்களுக்கும் மனிதாவிமான அடிப்படையில் அலுவலக தேவைக்காக மாற்று இடமாக கடை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு மன்னார் நகர சபையால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் அதனை விடுத்து நகர சபையின் அபிவிருத்தியை சீர் குழைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் சில தவரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(11-05-2020)

Reviewed by Author
on
May 11, 2020
Rating:

No comments:
Post a Comment