மீண்டும் தமிழீழ சைபர் படையணி ......
மீண்டும் தமிழீழ சைபர் படையணி ஸ்ரீலங்காவின் முக்கிய அரச இணையத்தளங்கள் மீது தாக்குதல்.
ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மீது சற்று முன்னர் சைபர் தாக்குதலை தமிழீழம் சைபர் போர்ஸ் மேற்கொண்டுள்ளது.தமிழர்களின் அறிவுப்பெட்டகமான யாழ்நூலகம் எரியூட்டப்பட்டதன் 39ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்து இத் தாக்குதல் நடத்தப்படுள்ளது.
சிறிலங்கா அரச இணையத்தளங்களான சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, சிறிலங்காவின் சுகாதார அமைச்சு போன்ற தளங்களே தக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழீழம் சைபர் போரஸ் சிறிலங்கா அரசின் 4 மிகமுக்கியமான அமைச்சு இணையங்களை ஊடுருவி தமிழீழம் சைபர் போஸ் குழுவினர் புலிக்கொடியை பறக்கவிட்டு தமிழ்மக்கள் தம்மீது இழைக்கப்படும் கலாச்சார இனவழிப்பை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டோம் என்றும் பதிவிட்டது மட்டுமின்றி விழவிழ எழுவோம் என்கின்ற பாடலையும் ஒலிக்கச்செய்துள்ளனர் அதுமட்டுமின்றி கடந்த மே18ம் திகதியும் இவ்வாறான ஒரு பாரிய இணையவழித்தாக்குதல் நடந்த போதும் சிறிலங்கா விமானப்படை அவசர குழுவினரும் சிறிலங்காவின் சைபர் பாதுகாப்பு குழுவினரும் தாம் வெற்றிகரமாக இந்த தாக்குதலை எதிர்கொண்டதாக என்று கூறியிருந்த வேளையில் இன்று இந்த தாக்குதலானது சிறிலங்கா அரசின் சைபர் பிரிவின் ஆன்ம பலத்தை அசைத்துப்பாத்திருக்கிறது என்றே குறிப்பிட வேண்டும்.
மீண்டும் தமிழீழ சைபர் படையணி ......
Reviewed by Author
on
May 30, 2020
Rating:

No comments:
Post a Comment