கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்........
நிந்தவூர் கடற்கறை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை பெண் ஒருவரின் இறந்த உடல் கரை ஒதுங்கியது.
அவ்வுடலை இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
இதனால் பொதுமக்களின் உதவியை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக
சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர். அதன் பின்னர்
அதிகளவான மக்கள் பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மருமகன்
இரவு அடையாளம் காட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வியும் பார்வையிட்டார்.
இதனடிப்படையில் நிந்தவூர், இமாம் ரூமி வீதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தாயான
57 வயது மதிக்கத்தக்க ஆதம்லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டது. சம்பவ
இடத்திற்கு வந்த இராணுவத்தினரும், சம்மாந்துறை பொலிஸாரும் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் சம்மாந்துறை வைத்திய சாலைக்கு
எடுத்து செல்லப்பட்டது.
கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்........
Reviewed by Author
on
May 30, 2020
Rating:

No comments:
Post a Comment