மன்னாரில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு எடிசனின் நிதி உதவியில் உலர் உணவு பொதிகள்.....
பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்ற பரப்பான்கண்டல் எடிசன்
அவர்களின் சொந்த நிதியின் கீழ் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட,மாற்றாற்றல்
கொண்ட 50 நபர்களுக்கு நேற்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
-இலங்கை
உதை பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் மாவட்ட உதை பந்தாட்
லீக்கின் தலைவருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் அவர்களின் கோரிக்கைக்கு
அமைவாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்ற
பரப்பான்கண்டல் எடிசன் அவர்கள் வழங்கி நிதி உதவியில் தெரிவு செய்யப்பட்ட
யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட,மாற்றாற்றல் கொண்ட 50 நபர்களுக்கு அவர்களின்
வீடுகளுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் நேரடியாக கொண்டு சென்று
கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட உதை பந்தாட்
லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் அவருடைய குழுவினர்
இணைந்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு எடிசனின் நிதி உதவியில் உலர் உணவு பொதிகள்.....
Reviewed by Author
on
June 02, 2020
Rating:

No comments:
Post a Comment