மீண்டும் இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.....
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தது 888 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து 8 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 211 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 55 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ்
தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment