தனிமைப்படுத்தல் நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த திருகோணமலையை சேர்ந்த பெண்........
கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக, சவுதிஅரேபியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் விடத்தல்பளை
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், நேற்று முன்தினம் குழந்தைப் பேற்றுக்கான வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத்தினரால், யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் மகப்பேறு இடம்பெற்றுள்ளது.மகப்பேற்றின் பின்னர், குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகவும், வைத்தியர்கள் தெரிவித்ததுடன், சிகிச்சை விடுதியில் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக எவரும் அற்ற நிலையில், தனியாக, கண்ணாடி
பொருத்தப்பட்ட தனியான விடுதியில் இந்த தாயுக்கும் சேய்க்குமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
தனிமைப்படுத்தல் நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த திருகோணமலையை சேர்ந்த பெண்........
Reviewed by Author
on
August 02, 2020
Rating:

No comments:
Post a Comment