வவுனியாவில் ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்கள் பாதிப்பு
வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று (08) பிற்பகல் வவுனியாவில் ஆலங்கட்டி மழை பெய்ததுடன், சில பகுதிகளில் கடும் காற்றும் வீசியது.
இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் கணேசபுரம், சமயபுரம், நெளுக்குளம் ஆகிய பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 50 வீடுகளின் கூரைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், இரு ஆலயங்களின் கூரைப்பகுதியும் சேதமடைந்துள்ளது. வீதிகள், வீடுகளில் நின்ற பயன்தரு மரங்கள் பலவும் முறிந்து வீழ்ந்துள்ளன.
இந்நிலையில், பாதிப்படைந்த மக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மாவட்ட செயலகம் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது
வவுனியாவில் ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்கள் பாதிப்பு
Reviewed by Author
on
September 01, 2020
Rating:

No comments:
Post a Comment