மக்களுக்கு சேவை செய்ய திறந்த மனதுடன் உள்ளேன் - ஏ.எச்.எம். ரியாஸ்
முன்நாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண புத்தளம் மாவட்ட அமைப்பாளர் மற்றும் கற்பிட்டி, முந்தல் பிரதேச அபிவிருத்திக்கு குழு பிரதித் தலைவருமான ஏ.எச்.எம். ரியாஸ் அவர்களை நேரில் சென்று அடுத்த கட்ட அரசியல் தொடர்பாக வினவிய போது; கடந்த பொதுத் தேர்தலில் தமக்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய நான் திறந்த மனதுடன் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தராசுக் கூட்டணி சார்பாக பதினொரு பேர் போட்டியிட்ட சந்தர்ப்பத்திலும் ஆளுங்கட்சியின் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளராக நான் பொதுத் தேர்தலைக் களம் கண்டு கணிசமான முஸ்லீம் வாக்குகளை ஆளுங்கட்சிக்கு பெற்றுக் கொடுத்த காரணத்தினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் கௌரவிக்கப்பட்டு, தங்களின் பிரதேசங்களில் நடக்கவிருக்கும் அனைத்து அபிவிருத்திகளும் தங்களின் மூலமே நடைபெறும் என்ற உறுதிமொழியையும் வழங்கியும் உள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் உங்கள் பகுதிகளில் காணப்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதற்குரிய முறையான ஆவணங்களுடன், அவ்வபிவிருத்தியுடன் தொடர்பான அமைச்சுகளுக்கு சென்று, அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முழுமையான அதிகாரத்தையும் கட்சியின் சார்பாக தங்களுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின் இறுதியில் புத்தளம் மாவட்டத்தில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கட்சித் தலைமைக்கு விரிவுபடுத்தியுமுள்ளார். அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முழுமையான கவனம் செலுத்தப்படும் என்றும் கட்சித் தலைமை வாக்களித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த பொதுத் தேர்தலில் எமது கட்சிக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் யாராக இருப்பினும் என்னை நேரடியாக சந்திக்கலாம், என்வீட்டுக் கதவு என்றும் திறந்தபடியே இருக்கும் மக்களின் சேவை நோக்கத்திற்காக என்று மேலும் தெரிவித்தார். ஆகவே தங்களின் பிரச்சினைகள் யாதாக இருப்பினும், முறையான ஆவணங்களுடன் தன்னை சந்திக்கும் வேளையில், தான் அப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முழுமையான முயற்சியை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
(அபூ பைஹா)

No comments:
Post a Comment