அண்மைய செய்திகள்

recent
-

இராமர் பாலம் பற்றிய அறிவித்தல் பலகையில்இந்துக் கடவுளின் படங்களை அனுமதியாது!மன்னார் மறைக்கோட்ட முதல்வர் கண்டனம்

 இராமர் பாலம் பற்றிய அறிவித்தல் பலகையில்இந்துக் கடவுளின் படங்களை அனுமதியாது!மன்னார் மறைக்கோட்ட முதல்வர் கண்டனம்

.


இதுதொடர்பாக மன்னார் மறைக்கோட்ட முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக எந்தவித கட்டுமானங்களும் அல்லது விளம்பர பலகைகளும் அமைக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், குறித்த அறிவித்தல் பலகை அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், மத அடையாளங்களை முன்னிறுத்தி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது சமூக நல்லிணக்கத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதகமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்ட அறிவித்தல் பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.







இராமர் பாலம் பற்றிய அறிவித்தல் பலகையில்இந்துக் கடவுளின் படங்களை அனுமதியாது!மன்னார் மறைக்கோட்ட முதல்வர் கண்டனம் Reviewed by Vijithan on January 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.