மன்னாரில் மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு தொடர்பான செயலமர்வு
மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் மாவட்ட ரீதியில் காணப்படுகின்ற மத ரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு புரிந்துணர்வு மூலம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாகவும் கடந்த வருடங்களில் இலங்கையில் உள்ள நகரசபை பிரிவுகளில் உள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட மதரீதியான ஆய்வு தொடர்பான விவரங்களை கலந்தாலோசிக்கும் முகமாகவும் மேற்படி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வுக்கு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் கிராம அலுவலர்கள் சமூதாய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஊடகவியளாலர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் இறுதியில் அண்மைகலமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் மத ரீதியான முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெறாமல் பாதுகாப்பது தொடர்பாகவும் அதே நேரத்தில் குறித்த பிரதேச சர்வமத குழுவை நிலை பெறு தன்மையுடைய குழுவாக மாற்றியமைப்பதற்கான விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு தொடர்பான செயலமர்வு
Reviewed by Author
on
September 29, 2020
Rating:

No comments:
Post a Comment