யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே மோதல் ; பொலிஸார் குவிப்பு! வெளியானது
இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடியுள்ளனர். இதன்போது தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது காவலாளி மற்றும் விரிவுரையாளர்கள், தம்மீது தாக்குதல் நடத்தியதாககூறிய மாணவர்கள், துணைவேந்தர் தாக்கியதில் தனக்கு காயம் ஏற்பட்டதாக மாணவன் கழுத்தில் இருந்த காயத்தையும் காண்பித்ததார்.
அத்துடன் பல்கலைகழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறக்கி அடிப்போம், சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் எனவும் அச்சுறுத்தியதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
அதோடு பல்கலைகழக துணைவேந்தருக்கும், காவலாளிக்கும், விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது? என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே மோதல் ; பொலிஸார் குவிப்பு! வெளியானது
Reviewed by Author
on
October 08, 2020
Rating:

No comments:
Post a Comment