மன்னாரில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அவசர கலந்துரையாடல்.-Video &Photos
மன்னார் மாவட்டம் கடல் மார்க்க தொடர்புகளைக் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளதால் பல்வேறு அபாயங்களை எதிர் நோக்கக்கூடிய நிலை உள்ளது.-
மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவிப்பு.
குறித்த கூட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தொற்று தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதோடு எச்சரிக்கையினையும் மேற்கொண்டுள்ளோம்.
எதிர் வரும் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் மேற்பார்வையில் இங்கு இருக்கக்கூடிய சகாதார உத்தியோகத்தர்களின் உதவியுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
பிரதேசச் செயலகத்தில் கடமையாற்றும் பிரதேசச் செயலாளர் உற்பட கிராம அலுவலகர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ளப்டவுள்ளது.
எவ்வாறு சுகாதார நடவடிக்கைகளை பின் பற்றி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக இருந்தோமோ அதே வகையிலே உங்களினுடைய பூரணமான ஒத்துழைப்பை மக்களாகிய நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்.
நிச்சையமாக பல்வேறு அபாயங்களை எதிர் நோக்கக்கூடிய ஒரு மாவட்டமாக உள்ளது. கடல் மார்க்கமாக தொடர்புகளைக் கொண்ட ஒரு மாவட்டமாக மன்னார் மாவட்டம் உள்ளது.
எனவே நாங்கள் அணைவரும் அவதானத்துடன் செயல் பட வேண்டிய நிலை உள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்கு வருகை தருகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
அரச தனியார் போக்குவரத்து சேவைகளின் அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பிரதேச மற்றும் உள்ளுராட்சி சபை அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அனைவரினுடைய ஒத்துழைப்புக்களினுடாக ஏற்படக்கூடிய அபாயங்களில் இருந்து பாதுகாப்பை வழங்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இதற்காக அனைத்து பொது மக்களினதும் ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,,,,,,
மன்னார் மாவட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை(5) காலை மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
பல்வேறு திணைக்களங்களையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது டெங்கு மற்றும் கொரோனா தொற்று போன்றவற்றை தடுக்க எவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது என்று ஆராயப்பட்டது.
கொரோனா தொற்றை பொறுத்தவரையில் மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் அபாயம் கூடிய பகுதியாக காணப்படுகின்றது.
கடல் வழியாக கடத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் மூலமாக இந்தியாவில் இருந்து கொரோனா தொற்று மன்னாரில் பரவி மன்னாரில் இருந்து ஏனைய இடங்களுக்கு பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
-சுகாதார துறையினரும்,பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவரும் இந்திய மீனவர்களுடன் தொடர்பு பட்ட மேலும் 7 பேரூம் அடையாளம் காணப்பட்டு வங்காலையிலும், மன்னாரிலும் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலை தொடர்பாக நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம்.
இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர வர்த்தக வலையங்களில் வேளை செய்யக்கூடிய பணியாளர்கள் தொடர்பான விபரங்களை சில தினங்களின் திரட்டும் நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் மற்றும் கிராம அலுவலகர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இவர்களும் கண்காணிக்கப்பட உள்ளனர்.இதனை விட தற்போது பொது சுகாதார பரிசோதகர்கள் பொது போக்குவரத்தையும்,பொது மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களையும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனாவின் முதலாவது அழையின் போது மக்கள் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எவ்வாறு மன்னார் மாவட்டத்தை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்களோ அதே போன்று தற்போதைய இக்கட்டான நேரத்திலும் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கி எமது மாவட்டத்தை பாதுகாப்பான மாவட்டமாக திகழ்வதற்கு பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
>மன்னாரில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அவசர கலந்துரையாடல்
மன்னாரில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அவசர கலந்துரையாடல்.-Video &Photos
Reviewed by Author
on
October 05, 2020
Rating:

No comments:
Post a Comment