அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்று உறுதி!
ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகரான 31 வயதான ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தமக்கும் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட் செய்துள்ளார்.
மேலும், தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த டுவிட் பதவில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பல்வேறு இடங்களுக்கு ட்ரம்ப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அவருடன் ஆலோசகர் ஹிக்ஸும் சென்று வந்துள்ளார். அத்துடன் புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போதும் ஹிக்ஸ் ட்ரம்புடன் இருந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்று உறுதி!
Reviewed by Author
on
October 02, 2020
Rating:

No comments:
Post a Comment