அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள்!

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 20 ம் திகதி அமைச்சு விடயத்துறைகளில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்திற்கு ஏற்பவே இந்த அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இதேவேளை, சுபீட்சத்தின் நோக்கு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முகப் புத்தகத்தில் பதிவிட்டதாவது, 21 ஆம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டாக கருதப்படுகிறது. அதை யதார்த்தமாக்குவதற்கு “தொழில்நுட்ப அடிப்படையிலான ஒரு சமூகத்தை” உருவாக்குவது “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை திட்டத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள்! Reviewed by Author on November 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.