வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான சுகாதார நடைமுறைகள்
*ஒருவர் கொரோனா நோயாளியுடன் பழகியிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்த நாள் முதல் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
*எனினும், வீட்டில் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைவாக தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்படலாம்.
*எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீட்டை விட்டு வௌியேறக் கூடாது.
*அதேபோன்று, வௌிநபர்கள் எவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது.
*இயலுமானவரை, வீடுகளுக்குள் காற்றோட்டத்தைப் பேண வேண்டும்.
*அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீடுகளுக்குள் ஒவ்வொருவருக்கிடையிலும் 01 மீட்டர் இடைவௌியைப் பேண வேண்டும்.
*வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானது.
*அழுக்கான கைகளினால் முகம், வாய், மூக்கு பகுதிகளை தொடக்கூடாது.
*குடும்ப உறுப்பினர்களும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் 20 விநாடிகள் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
*கை கழுவுவதற்கான வசதி இல்லாதவிடத்து, கிருமித்தொற்று நீக்கும் திரவத்தை பயன்படுத்தலாம். *இயலுமானால், வீட்டிலுள்ள அனைவரும் நாளொன்றில் இரு தடவையேனும், உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
*வயோதிபர்கள் மற்றும் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களிடம் விலகியிருத்தல் அவசியமாகும்.
*நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களை பராமரிக்க வேண்டிய தேவை காணப்படின், அவர்களுக்கான மருந்துகளை உரிய நேரத்திற்கு வழங்க வேண்டும்.
*இருமல் , தும்மல் வரும் போது டிஷூத் தாள்களை பயன்படுத்தல் அல்லது முகத்தை முழங்கைகளின் உட்புறத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
*பயன்படுத்தப்பட்ட டிஷூ தாள்கள், உரிய வகையில் குப்பைக்கூடைகளுக்குள் அகற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
*ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் அவசியமானது.
*நாளொன்றில் இரண்டு தொடக்கம் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.
*ஒருவர், தாம் கொரோனா நோயாளியுடன் பழகியிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்தால், அவர் தனது வீட்டில் தனி அறையில் தங்க வேண்டும்.
*அத்தகைய ஒருவர் – இயலுமானால், குளியலறை மற்றும் கழிப்பறை என்பவற்றை பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டுமென்பதுடன், அவற்றை சுத்தமாக பேண வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான சுகாதார நடைமுறைகள்
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment