மட்டக்களப்பை சேர்ந்தவர் அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி பலி
மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த திசாந்தன் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின்னர் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக குறிப்பிடப்படுகிறது.
கிறிஸ்மஸ் தினத்தன்று தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்றிருந்த இவர் அங்கு நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாகவும், பாரிய தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்தவர் அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி பலி
Reviewed by Author
on
December 28, 2020
Rating:

No comments:
Post a Comment