அண்மைய செய்திகள்

recent
-

வர்த்தக வெடிபொருட்களை சட்டவிரோதமாக கடத்திய நபர் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த 19 ஆம் திகதி கலேவெல புலனவெவ பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வர்த்தக வெடிபொருட்களை சட்டவிரோதமாக மோட்டார் வண்டியில் கொண்டு சென்ற ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், தம்புள்ளை பொலிஸ் தலைமையகத்துடன் ஒருங்கிணைந்து, கலேவெல புலனவெவ பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் வண்டியொன்றை சோதனை செய்தனர்.

 அப்போது, அங்கு நுட்பமாக மறைத்து கொண்டு செல்லப்பட்ட வாட்டர் ஜெல் குச்சிகள் 175 வுடன் 34 வயதான கலேவெல பகுதியில் வசிக்கும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். குவாரி தொழிலுக்கு வணிக வெடிபொருளாக வெளியிடப்படும் இந்த வாட்டர் ஜெல் மீன்பிடிக்க பயன்படுத்துவதுக்காக இவ்வாறு கடத்தப்பட்டதாக கடற்படை சந்தேகப்படுகிறது.

 கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட வெடிபொருட்கள், மோட்டார் வண்டி மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

வர்த்தக வெடிபொருட்களை சட்டவிரோதமாக கடத்திய நபர் கைது Reviewed by Author on December 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.