அண்மைய செய்திகள்

  
-

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் சுமார் 1000 ஏக்கர் விவசாய செய்கையை பாதுகாக்க அரசாங்க அதிபர் தலைமையில் அதிரடி நடவடிக்கை.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்புற்பட்ட பரிகாரிக்கண்டன் கிராமத்தில் உள்ள கொம்பன் சாய்ந்த குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய செய்கை பாதீப்படைந்துள்ள நிலையில்,குறித்த விவாசாய செய்கையை பாதுபாக்கும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை(5) மாலை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரிகாரிக்கண்டன் கிராமத்தில் உள்ள கொம்பன் சாய்ந்த குளத்தின் வான் கதவுகள் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்டு குளத்தின் நீர் மட்ட கொள்வனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குளத்தின் கொள்வனவு அதிகரிக்கப்பட்டமையினால் கொம்பன் சாய்ந்த குளத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள மூக்கராயன் குளம், சிறுகண்டல் குளம், பரிகாரிகண்டல் குளம், கற்கடந்த குளம், பெற்றான் குளம் ஆகிய குளங்களின் மேலதிக நீர் கொம்பன் சாய்ந்த குளத்தின் வான் கதவு ஊடாக வெளியேற வேண்டும். 

 வான் கதவினூடாக வெளியேறும் நீர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் குறித்த குளங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கையானது நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. சுமார் 1000 ஏக்கர் விவசாய செய்கை இவ்வாறு பாதீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த நிலை காணப்பட்டால் ஒட்டு மொத்த விவசாய செய்கையும் பாதீப்படையும் நிலை ஏற்பட்டது. இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் உரிய அமைப்பினர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிறிஸ்கந்தகுமார்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன், பிரதேச நீர்ப்பாசன பணிப்பாளர், பொறியியலாளர், பொறியியல் உதவியலாளர்கள், கமக்கார அமைப்பின் தலைவர்,பிரதேசச் செயலாளர்,கிராம அலுவலகர்,பரிகாரிகண்டல் இராணுவ அதிகாரி,நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு, கொம்பன் சாய்ந்த குளத்தின் வான் கதவிற்கு அருகில் பாதுகாப்பான முறையில் அதற்கான பொறியியல் தொழில் நுற்பத்தோடு வாய்க்கால் வெட்டி திறக்கப்பட்டு நீர் வெளியேற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
                  

 இதனால் நீர் வெகுவாக குறைந்து பாதீக்கப்பட்டுள்ள விவசாய செய்கை பாதுகாக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 













மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் சுமார் 1000 ஏக்கர் விவசாய செய்கையை பாதுகாக்க அரசாங்க அதிபர் தலைமையில் அதிரடி நடவடிக்கை. Reviewed by Author on December 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.