அண்மைய செய்திகள்

recent
-

ஜரோப்பாவால் தனிமைப்படுத்தப்பட இங்கிலாந்து

பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வகை விகாரமான கொரோனா வைரஸ் காரணமாக, பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியாவுக்கு இடையிலான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்துள்ளது. இந்த புதிய விகாரமான கொரோனா வைரஸ் 70 சதவீதம் அதிக தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.இதனால், நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் முடங்கியுள்ளதால், கோவிட் தடுப்பூசிகளும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்கள் கிடைப்பதற்கு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பிரித்தானிய சூப்பர்மார்க்கெட்கள் உணவு மற்றும் கிறிஸ்துமஸ் பொருட்களின் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் ஃபைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசியின் முக்கிய விநியோகத்தை இந்த முற்றுகை சீர்குலைக்கும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.சரக்கு தடை 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தால் இராணுவ விமானம் பெல்ஜியத்திலிருந்து தடுப்பூசி விநியோகிக்க முடியும் என்று சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது.

இந்த போக்குவரத்து தடையால் இரு நாடுகளிலும் உள்ள துறைமுகங்களிலிருந்து நெடுஞ்சாலைகளில் 7 மைல் நீளத்துக்கு சரக்கு லாரிகள் தேங்கி நிற்கின்றன. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சர்கள் மற்றும் இராணுவத்தின் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்ட 48 மணி நேர தடைக்கு தீர்வு காண போரிஸ் ஜான்சன் தனது அவசர கோப்ரா குழுவை இன்று சந்திக்கிறார்.





ஜரோப்பாவால் தனிமைப்படுத்தப்பட இங்கிலாந்து Reviewed by Author on December 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.