அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம்

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார்.

 இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார். அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன.

 இதேநேரம், உலக முதியோர் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் முதாலம் திகதி இலங்கையின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை முதியயோருக்கான தேசிய சபை குறித்த பெண்மணிக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம் Reviewed by Author on December 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.