மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பழைய மாணவர்களினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.
குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(29) காலை 10.30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இடம் பெற்றது.இதன் போது குறித்த பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-பாடசாலையின் முதல்வர்,பழைய மாணவர்கள் இணைந்து குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.மேலும் மாந்தை மேற்கு,மடு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பழைய மாணவர்களினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.
Reviewed by Author
on
January 29, 2021
Rating:
Reviewed by Author
on
January 29, 2021
Rating:


No comments:
Post a Comment