அண்மைய செய்திகள்

recent
-

ஐயன் வள்ளுவன் தினத்தில் திருக்குறளின் சிறப்புகள் 10 - தெரிந்த திருக்குறளும் - தெரியாத தகவல்களும்..................

1. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது (9). தமிழுக்கு பெருமை சேர்த்த திருக்குறளில் ஒரு தடவை கூட "தமிழ் என்ற வார்த்தை உபயோகபடுத்தவில்லை. 

2. திருக்குறளில் - "குன்றிமணி" என்ற ஒரே விதையை மட்டும் தான் பயன்படுத்தபட்டிருக்கிறது 

3.திருக்குறளில் ஒரே முறை தான் "ளீ / ங" உபயோகபடுத்தபட்டிருக்கிறது. 

4. திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிர் எழுத்து "ஒள" 

5. திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் - " நெருஞ்சிப்பழம்" 

6. திருக்குறளில் 1705 தடவை "னி" என்னும் எழுத்தை அதிகபட்சமயாய் உபயோகபடுத்தியுள்ளார். 

7. திருக்குறளில் இடம் பெற்ற இரண்டே மலர்கள் - " அனிச்சம் மற்றும் குவளை" 

8, திருக்குறளில் மொத்தம் உள்ள எழுத்துக்கள - 42,194. அதே போல தமிழ் எழுத்துகளில் உள்ள 247 எழுத்துகளில் 37 எழுத்துக்களை ஒரு முறை கூட பயன்படுத்தவே இல்லை. 

9. திருக்குறளில் "பனை மற்றூம் மூங்கில்" மட்டும் தான் மரங்களின் வரிசையில் வரும் பேர்கள் ஆகும். இதை தவிர ஒரு மரத்தையும் அவர் எங்கும் குறிப்பிடவில்லை. 

10. திருக்குறள் இது வரை 26 மொழிகளில் மொழி பெயர்த்து இருந்தாலும் இதை ஆங்கிலத்தில் மட்டும் 40 தடவை வெவ்வேறு ஆட்கள் மொழி பெயர்த்து தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

ஓன்றரை வரி குறளுக்குள் உலகையே இழுத்துப்பொருத்திய வள்ளுவனுக்கு இன்று பிறந்தநாள்.இருக்கும் மொழிகளிலேயே சிறந்த மொழி தமிழ் மொழிதான் என்று உலகிற்கு உணர்த்திய அவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று வாயார பாடி மகிழ்ந்தார் மகாகவி பாரதி.”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” இரண்டே அடிகளில் வாழ்க்கையின் சூத்திரத்தை இவரை தவிர வேறு யாராலும் கூறமுடியாது. திருவள்ளூவர் ஆதி, பகவன் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் என்றும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும் கிமு முதல் நூற்றாண்டில் பிறந்தார் என்றும் வரலாற்று குறிப்புகள் நமக்கு நினைவு படுத்துகின்றன. 

திருவள்ளூவர் திருக்குறளை தமிழ்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்ட காலத்தில் ஔவையாரின் உதவியுடன் மதுரையில் அரங்கேற்றியதாகவும் கூறபடுகிறது. 

இவர் இயற்றிய திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று முப்பால்களில் 1330 குறட்பாக்கள் வாழ்வின் இலக்கை விளக்குவதாக உள்ளது. 133 அதிகாjங்களில் 1330 குறள்களைப் பதிவு செய்து மனிதர்கள் தம் அகவாழ்வில் சுமூகமாக கூடி வாழவும், புற வாழ்விலும இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழ தேவையான பண்புகளையும் விளக்குகிறது. தான் இயற்றிய குறள்களில் எந்த ஒரு இனம், மொழி, மதம், காலம், இடம், குறித்து எழுதாமல் சென்றதன் மூலமாக திருவள்ளூவர் எக்காலத்திற்கும் ஏற்ற பொதுமறை நாயகராக திகழ்கிறார். திருவள்ளூவர் புகழ் பாடுவதை விட, அவரது குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கடைபிடித்தால் வாழ்வில் ஏற்றமும், நாட்டில் ஒற்றுமையும், நன்மையும் விளையும் என்பது அசைக்க முடியாத உண்மை.. திருவள்ளுவரை போற்றுவோம், வாழ்வை செம்மையாக்குவோம். 

திருக்குறள் தந்த வான்புகழ் வள்ளுவர் தின நல்வாழ்த்துகள்

ஐயன் வள்ளுவன் தினத்தில் திருக்குறளின் சிறப்புகள் 10 - தெரிந்த திருக்குறளும் - தெரியாத தகவல்களும்.................. Reviewed by Author on January 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.