சிறுவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிசுக்கள் உடல் கருகி பலி!
குழந்தைகள் இருந்த அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, கண்தெரியாத அளவிற்கு முற்றிலும் பெரும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
பணியில் இருந்த மருத்துவர் மற்றும் பிற ஊழியர்களை உதவிக்கு அழைத்து 7 குழந்தைகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
அதற்குள் 10 குழந்தைகளின் உயிர்கள் அநியாயமாக பறிபோய்விட்டன.
அதில் 3 குழந்தைகள் தீக்காயங்களாலும், 7 குழந்தைகள் மூச்சுத் திணறியும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
இதனிடையே, பந்தாரா சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலைமதிப்பற்ற பிஞ்சு உயிர்களின் இழப்பு, இதயத்தை கலங்க வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிசுக்கள் உடல் கருகி பலி!
Reviewed by Author
on
January 10, 2021
Rating:

No comments:
Post a Comment