முள்ளிவாய்க்கால் தூபி விவகாரம்; கைதான மாணவர்கள் விடுதலை!
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை மற்றும் கலகம் விளைவித்தனர் என்று இரண்டு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.
மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
இரு தரப்பி விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், மாணவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். வழக்கு தவணையிடப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தூபி விவகாரம்; கைதான மாணவர்கள் விடுதலை!
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment