அண்மைய செய்திகள்

recent
-

மிகச் சிறப்பாக இடம்பெற்ற ஒட்டுசுட்டான் திருவேட்டை உற்சவம்

 வரலாற்று சிறப்புமிக்க ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின்  2005 ஆம் ஆண்டு மகோத்சவத்தின் 13 ஆவது உற்சவமான திருவேட்டை உற்சவம் நேற்று(07) மாலை மிக சிறப்பாக இடம் பெற்றது 



ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து ஆலயத்திலிருந்து வேட்டைக்காக புறப்பட்ட எம்பெருமான் வழமையான வீதிகள் ஊடாக சென்று வேட்டையாடி வழமையான வீதிகள் ஊடாக மீண்டும் ஆலயத்தை வருகை தந்து பிராயச்சித்த அபிஷேகம் இடம் பெற்று இரவு பூசைகளும் இடம் பெற்றிருந்தது 


இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களுக்காக வேடுவ வேடம் அணிந்து வேட்டையாடும் அந்த உற்சவத்தில் கலந்து கொண்டதோடு வீதிகளெங்கும் எம்பெருமானுக்கு  கும்பங்கள் வைத்து மக்கள் வரவேற்று இருந்தனர்


வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் உடைய 2025  மகோத்சவம் கடந்த மாதம் ஆரம்பமாகி நேற்று (07) வேட்டை திருவிழாவும் இன்று (08) சப்பற திருவிழாவும் நாளை (09) தேர்த் திருவிழாவும் நாளை மறுதினம் (10) தீர்த்த திருவிழாவோடு உற்சவம் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது 













மிகச் சிறப்பாக இடம்பெற்ற ஒட்டுசுட்டான் திருவேட்டை உற்சவம் Reviewed by Vijithan on July 08, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.