திருமதி உலக அழகி கரோலின் ஜூரிக்கு பொலிஸ் பிணை!
திருமதி இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகாவுக்கு மகுடம் சூட்டப்பட்டு சிறிது நேரத்தில் ஜூரி அறிவிப்பொன்றை வௌியிட்டு, வெற்றியாளர் விவாகரத்து ஆனவர் என்பதால் அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது என கூறி இரண்டாவது இடத்தை பெற்றவரே வெற்றியாளர் என அறிவித்து மகுடத்தை பறித்து இரண்டாம் இடம்பெற்ற பெண்ணுக்கு அணிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்து ஆனவர் இல்லை என தெரிவித்து பேஸ்புக் பதிவொன்றையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஜூரியின் இந்த அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என அறிவித்த ஏற்பாட்டு குழு, மீண்டும் புஷ்பிகாவை வெற்றியாளராக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி உலக அழகி கரோலின் ஜூரிக்கு பொலிஸ் பிணை!
Reviewed by Author
on
April 08, 2021
Rating:
Reviewed by Author
on
April 08, 2021
Rating:


No comments:
Post a Comment