அண்மைய செய்திகள்

recent
-

ரூ.5000 கொடுப்பனவு கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கல்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி அரசாங்கம் மக்களுக்கு வழங்கவுள்ள ரூ .5 ஆயிரம் கொடுப்பனவை நாளைய தினத்திற்குள் (12) வழங்குவது சிக்கலான காரியம் என சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5,000 கொடுப்பனவை வழங்குவதற்காக அரசாங்கம் காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமர மத்துமகலுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், "அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் 12 ஆம் திகதி சிறப்பு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், சமுர்தி ஊழியர்கள் இந்த விடுமுறையை இழந்துள்ளனர். 12, 13 மட்டுமன்றி புத்தாண்டிற்கு பின்னரும் இந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க எமக்கு கால அவகாசத்தை பெற்றுத் தருமாறு நாம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளோம். இந்த கொடுப்பனவினை வழங்குவதற்கான எந்த ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை. 

12 ஆம் திகதிதான் குறித்த ஆவணங்களை தயாரிக்க வேண்டும்." இது குறித்து சமுர்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறியிடம் அத தெரண வினவியது. " எங்களுக்கு கிடைத்த ஆலோசனையை விரைவில் செயல்படுத்துவதையே நாங்கள் தற்போது செய்துக் கொண்டுள்ளோம். நீண்ட காலமாக எங்கள் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். எனவே, இந்த நடவடிக்கைகள் மிகவும் சீராக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

" இதற்கிடையில், புதுவருடத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த கொடுப்பனவை வழங்குவது சாத்தியமில்லாததால் குறித்த கொடுப்பனவு வழங்களில் ஈடுபட மாட்டோம் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அனைத்து இலங்கை அரசாங்க மேம்பாட்டு அலுவலர்களின் கூட்டு தொழிற்சங்கம் ஆகியவை இன்று அறிவித்துள்ளன. கொவிட் -19 பேரனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண்டிகை காலத்திற்கு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு வழங்குவதற்கான தீர்மானம் தொடர்பான சுற்றறிக்கையும் நேற்று (10) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரூ.5000 கொடுப்பனவு கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கல்! Reviewed by Author on April 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.