மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்த நாய்க்காக நிறுத்தப்பட்ட போது டிப்பர் ரக வாகனம் மோதி இளைஞன் ஸ்தலத்தில் பலி! ஒருவர் படு காயம்!
அம்பலாந்தோட்டை - தங்கல்லை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடந்த நாய் ஒன்றிற்காக நிறுத்தப்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி வீதியை விட்டு விலகி வீசப்பட்டுள்ளதுடன், பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் டிப்பர் வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்த நாய்க்காக நிறுத்தப்பட்ட போது டிப்பர் ரக வாகனம் மோதி இளைஞன் ஸ்தலத்தில் பலி! ஒருவர் படு காயம்!
Reviewed by Author
on
May 02, 2021
Rating:
No comments:
Post a Comment