7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு
சப்ரகமுவ, மத்திய, மேல் ,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் நியாகம, நெலுவ, எல்பிட்டிய, பத்தேகம, தவலம, காலி, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்த, வலல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, இங்கிரிய, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த பிரதேச செயலாளர் பிரிவும் மண்சரிவு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
காலி மாவட்டத்தில் நாகொட, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, தெஹம்பவிட்ட ஆகிய மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, அயகம, கலவான, குருவிட்ட, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு, மண்திட்டு உடைந்து வீழ்தல், கற்கள் சரிதல், போன்ற அபாயம் காணப்படுவதனால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு
Reviewed by Author
on
May 15, 2021
Rating:

No comments:
Post a Comment