வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவிப்பு
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் நடைமுறை அமுலிலுள்ள இருந்த நிலையில் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் தகவல்கள் பொலிசாரினால் பதிவு செய்யப்படவுள்ளன.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் தாமதம் மற்றும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறை நாளை காலை முதல் முன்னெடுக்கப்படுவதினால் நாளை காலை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்..
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வரை இந்த ஸ்டிக்கர்களுடன் வாகனங்கள் பயணிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவிப்பு
Reviewed by Author
on
June 07, 2021
Rating:
Reviewed by Author
on
June 07, 2021
Rating:


No comments:
Post a Comment