கப்பல் மூழ்குவதால் எண்ணெய் கசிவு தவிர்க்க முடியாதது என்பதால் அதனை எதிர்கொள்ள தயாராகின்றது இலங்கை
சிறிய பொருட்கள் துணிக்கைகளை அகற்றக்கூடிய டிஸ்பேர்சன்ட்கள்,பூம்ஸ்,ஸ்கிமெர்ஸ் போன்றவற்றை எண்ணெய் கசிவை எதிர்கொள்வதற்கு தயாராகவைத்துள்ளதாக கடலோர சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மேற்குகரையோர பகுதிகளில் கடந்த 13 நாட்களாக எரிந்துகொண்டிருந்த கப்பல் ஏற்கனவே இலங்கை முன்னர் ஒருபோதும் சந்தித்திராத கடலோர சூழல் பேரழிவு ஏற்பட்டுள்ளது.கடற்கரைகள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன.
ஆனால் கப்பல் தற்போது மூழ்கிக்கொண்டுள்ளதால்-கப்பலில்இருந்து எண்ணெய் கழிவுகள் இந்துசமுத்திரத்திற்குள் வெளியேறினால் மேலும் மோசமான சூழல்பாதிப்புகள் ஏற்படலாம்.
கப்பலின் ஒரு பகுதிகடற்படுக்கையை தொட்டுவிட்டது கப்பலை நகர்த்தமுடியாத நிலைகாணப்படுகின்றது அது மூழ்கிக்கொண்டிருக்கின்றது இதனால் அதிகாரிகள் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என அல்ஜசீரா மினெல் பெர்ணான்டோ கொழும்பிலிருந்து தெரிவித்தார்.
எண்ணெய் கழிவுகள் கரையோரத்தை நெருங்குவதற்கு முன்னர் அவற்றை தடுப்பதற்கான ஏற்பாடுகளுடன் இந்திய கரையோரகாவல்படையின் கப்பலொன்று தயார்நிலையில் காணப்படுகின்றது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை மேலதிக உதவிகளை கோரியுள்ளது.
கப்பலை ஆழமான கடற்பகுதிக்குள் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் புதன்கிழமை தோல்வியடைந்ததன் காரணமாககப்பல் தொடர்ந்தும் மூழ்கிக்கொண்டிருக்கின்றது என கப்பலை இயக்கிய சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலின் ஒரு பகுதி 69 அடி ஆழத்தில் கடற்படுக்கையில் காணப்படுகின்றது என்பதை உறுதி செய்யமுடியும் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள நிறுவனம் முன்பகுதியும் மெதுவாக மூழ்கிக்கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளது.
வரை கப்பல் நீர்மட்டத்திலேயே காணப்படுகின்றது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் ஒரு பகுதிகடல்படுக்கை வரை சென்றாலும் சில பகுதிகள் நீரின் மேல்மட்டத்தில் காணப்படும் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர் எப்படிபார்த்தாலும் அதிகாரிகளை பொறுத்தவரை இது பெரிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் மூழ்குவதால் எண்ணெய் கசிவு தவிர்க்க முடியாதது என்பதால் அதனை எதிர்கொள்ள தயாராகின்றது இலங்கை
Reviewed by Author
on
June 03, 2021
Rating:
Reviewed by Author
on
June 03, 2021
Rating:









No comments:
Post a Comment