எமது மக்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் அகன்று சந்தோஷமான வாழ்க்கையை தொடர இந்த ஆண்டு அமைய வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
அரசியல் ரீதியான அடக்கு முறைகளை சந்தித்துள்ள நிலையில் பிறந்துள்ள புதிய ஆண்டு மக்களுக்கு நன்மையை தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
பிறந்துள்ள புதிய வருடத்தில் எமது மக்கள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான துன்பங்கள் இன்றி மகிழ்ச்சியாக வாழ இவ் ஆண்டு அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எமது மக்கள் கடந்த ஆண்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சி,இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து தற்போது மீண்டு வருகின்றனர்.
அரசியல் ரீதியான அடக்கு முறைகளையும் சந்தித்துள்ள நிலையில் பிறந்துள்ள புதிய ஆண்டு மக்களுக்கு நன்மையை தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும்.
எமது மக்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் அகன்று சந்தோஷமான வாழ்க்கையை தொடர்வதற்கான சந்தோஷமான எதிர்காலத்தை ஆரம்பிப்பதற்கான ஆண்டாக இந்த ஆண்டு அமைய வேண்டும்.
பிறந்துள்ள புதிய ஆண்டில் அனைத்து மக்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Reviewed by Vijithan
on
January 01, 2026
Rating:


No comments:
Post a Comment