மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட குறித்த சந்திப்பின் போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளினால் எடுத்துக்கூறப்பட்டது.
குறிப்பாக, தரமற்ற வலைகளே சந்தைக்கு வருவதாகவும் குறித்த வலைகளை ஆறு மாதங்கள் வரையிலேயே பயன்படுத்தக் கூடியதாக இருப்பதனால் செலவீனங்கள் அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர்.
அதேபோன்று, கடற்றொழில்சார் உபகரணங்களுக்கு நிர்ணய விலை இன்மையினால் வியாபாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
கடற்றொழிலாளர்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தரமான கடற்றொழில் சார் உபகரணங்கள் நியாயமான விலையில் சந்தையில் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தும் என்று உறுதியளித்தார்.
அத்துடன், குறித்த விடயங்களை அமுல்ப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை
Reviewed by Author
on
June 13, 2021
Rating:

No comments:
Post a Comment