பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது!
750 மில்லி லீட்டர் போத்தலை வாங்கும் அந்த போத்தலின மீள்சுழற்சிக்காக ஒரு தொகை பணம் வைப்பீடு ரீதியில் வைத்துக்கொள்ள ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்று போத்தலை மீள ஒப்படைப்பதன் மூலம் வைப்புத் தொகையை திருப்பிப்பெற முடியும் என்றும், வெற்று போத்தலை அப்புறப்படுத்தினாலும், மற்றொரு நபர் அத்தகைய போத்தல்களை சேகரித்து ஒப்படைப்பதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அது தொடர்பில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வைப்புத்தொகை ரூ .10.00 தொடர்பான ஆலோசனைக்கு நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சு பல உற்பத்திகளை கடந்த காலங்களில் தடை செய்தது. அதேபோல் மேலும் பல உற்பத்திகளை எதிர்காலத்தில் தடை செய்ய எதிர்பார்த்து உள்ளது. இவற்றை தடை செய்வதற்கு பிரதான காரணம் சுற்றாடலுக்கு உகந்த வகையில் மாற்று உற்பத்திகளை மேற்கொள்ள முடிகின்ற போதிலும் அவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்ளாமையே ஆகும்.
பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது!
Reviewed by Author
on
June 14, 2021
Rating:
Reviewed by Author
on
June 14, 2021
Rating:


No comments:
Post a Comment